• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோவையில் சிறுமியை கடிக்க துரத்திய தெரு நாய்கள் – சமூக வலைத் தளங்களில் வைரலாகும் சிசிடிவி காட்சிகள்

BySeenu

Mar 16, 2024

கோவை மாநகராட்சி பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாக காணப்பட்டு வருகிறது.சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் இந்த தெருநாய்களால் பலரும் கடி வாங்கி பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.

இதனிடைய கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட உக்கடம் பகுதியில் வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற சிறுமியை அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள் துரத்தி உள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி வேகமாக அலறிக்கொண்டு வீட்டின் உள்ளே நுழைந்து தெரு நாயிடமிருந்து தப்பித்துள்ளார். இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க கோவை மாநகராட்சி பகுதிகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களை மாநகராட்சியினர் விரைந்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.