• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கோவையில் சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சி நடைபெறும் தேதி அறிவிப்பு…

BySeenu

Mar 2, 2024

பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் சார்பில் நடத்தப்படும் இந்திய வருடாந்திர நிகழ்வான சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சியின் பதினோராவது பதிப்பு மார்ச் 4ஆம் தேதி முதல் 6 தேதி வரை, கொடிசியா வர்த்தக கண்காட்சி மையத்தில் நடைபெற உள்ளது. இது உலோகம் மற்றும் உலோகம் சார்ந்த பொறியியல் துறையில் இந்தியாவின் திறன்களைச் சர்வதேச கொள்முதலாளர்களுக்கு எடுத்துக் காட்டும் நிகழ்வாக அமைய உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் 13 அறிவுசார் கருத்தரங்குகள் நடைபெற உள்ளதாகவும் அதில், ஜெர்மனியின் சாக்சன் மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர் தலைமையிலான குழு, பாதுகாப்பு உற்பத்தித் துறை, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO), டாடா ஸ்டீல், சீமென்ஸ், ஜாக்குவார், லேண்டு ரோவர் (ஜே.எல்.ஆர்.), நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன், ஓ.என்.டி.சி., ஜெர்மன் நாட்டு விவசாய் கருவிகள் பெருநிறுவனமான கிளாஸ், ஆடோமேஷன் அசோசியேஷன், இந்தியாவின் மின்ஸ்கூட்டர் நிறுவனமான ஏதர், சி.எம்.டி.ஐ – பெங்களூர், சி.எஸ்.ஐ.ஆர் – சி.ஆர்.ஆர்.ஐ., மின் வாகன கூட்டமைப்பு -எஸ்.எஸ்.இ.எம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் உரையாற்ற உள்ளனர்.

இதில் 300 உற்பத்தியாளர்கள், 149 பொறியியல் பொருட்களைக் காட்சிப்படுத்துவர் எனவும் 10 ஆயிரம் வர்த்தகர் பார்வையாளர்கள் 40 நாடுகளைச் சேர்ந்த 300 வெளிநாட்டு கொள்முதலாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சி ஸ்மார்ட் ஸ்டெய்னெபிள் இஞ்சினியரிங் என்பதை (#SmartSustainableEngineering) கருப்பொருளாக கொண்டு நடத்தப்பட உள்ளது.