• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை பேருந்து நிறுத்ததில் அரசு பேருந்தை வழிமறித்து தனியார் பேருந்து ஊழியர்கள் போராட்டம் 100க்கும் மேற்பட்ட பயணிகள் தவிப்பு!

ByG.Suresh

Feb 17, 2024

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலத்தில் இருந்து மதுரை செல்லும் அரசு பேருந்தின் புதிய வழித்தடத்தை கடந்த வாரம் உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் துவக்கி வைத்தார். இந்நிலையில் தனியார் பேருந்து செல்லும் நேரத்தில் அரசு பேருந்து இயக்குவதால் தனியார் பேருந்துக்கு இழப்பு ஏற்படுவதாக தனியார் பேருந்து ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சிவகங்கையில் இருந்து மதுரை செல்லும் பயணிகள் பேருந்து நிலையத்தில் சுமார் அரை மணி நேரம் அவதிக்குள்ளாகினர். போராட்டத்தில் ஈடுபட்டவர் உடன் பேச்சுவார்த்தை நடத்தி மாற்று ஏற்பாடுகள் செய்வதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து தற்போது பேருந்து சேவை துவங்கியுள்ளது.