• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஜனவரி 24, 25ல் பழனிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்..!

Byவிஷா

Jan 21, 2024

வருகிற 25ஆம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டு, ஜனவரி 24, 25 ஆகிய இரண்டு நாட்கள் பழனிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
ஜனவரி 25ஆம் தேதி தைப்பூசத் திருவிழாவைக் காண, தமிழகம் முழுவதும் இருந்து பழனி முருகனை தரிசிக்க மேலும் பக்தர்கள் வருகை தரலாம் என்பதால் பக்தர்கள் தேவை மற்றும் வசதிகளின் அடிப்படையில் மதுரை – பழனி இடையே ஜனவரி 24 மற்றும் 25 நாட்களில் சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் “பழனி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பின் படி மதுரை – பழனி தைப்பூச சிறப்பு ரயில் குறிப்பிட்ட இரு நாட்களிலும் மதுரையிலிருந்து காலை 06.00 மணிக்கு புறப்பட்டு காலை 08.30 மணிக்கு பழனி சென்று சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறு மார்க்கத்தில் பழனி – மதுரை தைப்பூச சிறப்பு ரயில் பழநியில் இருந்து மாலை 05.45 மணிக்கு புறப்பட்டு இரவு 08.15 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த சிறப்பு ரயில் சோழவந்தான், கொடை ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.