• Sun. May 19th, 2024

சென்னை கோயம்பேட்டில் பொங்கல் சிறப்பு சந்தை தொடக்கம்..!

Byவிஷா

Jan 11, 2024

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை கோயம்பேட்டில் பொங்கல் சிறப்பு சந்தை தொடங்கப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் பொங்கல் சிறப்பு சந்தை இன்று தொடங்குகிறது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி கோயம்பேடு சந்தையில் பொங்கல் சிறப்புச் சந்தை 9 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பொங்கல் சிறப்பு சந்தை கோயம்பேடு சந்தையின் தென்மேற்கு பகுதியில் உள்ள கனரக வாகன நிறுத்துமிடத்தில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த சந்தையில் கரும்பு கட்டுகள், மஞ்சள் மற்றும் இஞ்சிகொத்துகள் மட்டும் மொத்தவிலையில் விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு தேவையான வாழைக் கன்று, மண்பானை, வாழை இலை, வாழைக்கன்று, வாழைப் பழம், மாங்கொத்து, தோரணம், மொச்சைக்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு,கருணைக் கிழங்கு, பூசணிக்காய், தேங்காய், பழவகைகள், பூக்கள் ஆகியவற்றை காய்கறி, பழம் மற்றும் மலர் சந்தைகளில் பொதுமக்கள் வாங்கிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொங்கல் சிறப்பு சந்தையில் கோயம்பேடு சந்தை பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோயம்பேடு சந்தை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *