• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோவையில் தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை மேயர் வழங்கினார்..!

BySeenu

Jan 10, 2024

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்கள் சீருடைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை மேயர் கல்பனா ஆனந்தகுமார் வழங்கினர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர தூய்மைப்பணியாளர்கள் மொத்தம் 2220 நபர்களுக்கு வருடந்தோரும் வழங்கப்படும் சீருடைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை மேயர் .கல்பனா ஆனந்தகுமார் இன்று வழங்கினார். கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து மண்டலங்களில் பணிபுரியும் நிரந்தர தூய்மைப்பணியாளர்கள், கொசுப்புழு தடுப்பு பணியாளர்கள், வ.உ.சி.பூங்கா பணியாளர்கள், பாதாள சாக்கடை பணியாளர்கள், மாநகராட்சி மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் பணிபுரியும் பணியாளர்கள் ஆகமொத்தம் 2220 நபர்களுக்கு வருடந்தோரும் வழங்கப்படும். இந்த நிலையில் இன்று சீருடைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் மேயர் .கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் வழங்கினார்.

இதில் ஆண் தூய்மை பணியாளர்கள் சீருடைகளின் தொகுப்பாக காக்கி பேண்ட்(1 ஜோடி), காக்கி சர்ட்(1 ஜோடி), தலைப்பாகை -1, காலணி-1ஜோடி, மற்றும் சோப்புகள் -12 ஆகியவையும், பெண் தூய்மைப்பணியாளர்களின் சீருடைகளின் தொகுப்பாக சேலை(1ஜோடி), பிளவுஸ்(1ஜோடி), தலைப்பாகை-1, காலணி-1ஜோடி மற்றும் சோப்புகள் -12 ஆகியவை வழங்கப்பட்டன.
மேலும் பாதுகாப்பு உபகரணங்களின் தொகுப்புகளாக 2220 தூய்மை பணியாளர்களுக்கு மிளிரும் ஜாக்கெட், மழை கோட், கையுறை, முகக்கவசம், கம்பூட்ஸ், கட்சூ, பேக், கேப் ஆகியவையும் வழங்கப்பட்டன.