• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஓய்வுதியதாரர்களுக்கு தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு..!

Byவிஷா

Dec 30, 2023

ஓய்வூதியதாரர்கள் தங்களின் வாழ்நாள் சான்றிதழை, வருகிற 2024ஆம் ஆண்டு, மார்ச் 15ஆம் தேதிக்குள் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொதுவாகவே ஓய்வூதியத்தாரர்கள் அனைவரும் வருடத்தில் ஒரு முறை தங்கள் ஆயுட்காலச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் உள்ளபடி தாங்கள் கடைசியாக பணியாற்றி ஓய்வு பெற்ற அலுவலகம் அல்லது பனிமலையில் ஆயுட்காலச் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். அதன்படி தலைமையகத்தில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் தலைமையகத்திலும், பட்டு லாஸ் சாலை தொழில் கூடத்தில், மண்டல தொழிற்கூடத்தில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் அந்தந்த அலுவலகங்களிலும் சான்றிதழ்களை சமர்ப்பிக்கலாம்.
அதேசமயம் கேகே நகர் பயணச்சீட்டு அச்சகத்தில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் கே கே நகர் பணிமனையிலும், குரோம்பேட்டை பேருந்து கூண்டு கட்டும் பிரிவில் பணியாற்றிய ஓய்வூதியதாரர்கள் குரோம்பேட்டை 1 பணிமனையிலும் தங்களுடைய 2024 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சான்றிதழை மார்ச் 15ஆம் தேதிக்குள் அலுவலக நாட்களில் சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை அறிய 044-23455801 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.