• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கருப்பட்டி நாச்சிகுளத்திற்கு கூடுதல் பேருந்து விட கோரிக்கை..!

ByKalamegam Viswanathan

Dec 22, 2023

மதுரை மாவட்டம், சோழவந்தான், கருப்பட்டி நாச்சிகுளத்திற்கு கூடுதல் பேருந்து விட மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தானில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அருகில் முள்ளி பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி நாச்சிகுளம் அரசு ஆதிதிராவிட மேல்நிலைப்பள்ளி ஆகியவை உள்ளன. இந்த பள்ளிகளில் சுமார் 5000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் இவர்களுக்கு போதிய அளவில் பஸ் வசதி இல்லாததால் மிகவும் சிரமப்படுவதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர். நேற்று மாலை நாலு மணி அளவில் பள்ளி நேரம் முடிந்து பேருந்து நிலையத்திற்கு வந்த கருப்பட்டி இரும்பாடி நாச்சிகுளம் கரட்டுப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய மாணவ மாணவிகள் பேருந்து நிலையத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர்.
பின்னர் வந்த பேருந்தில் ஒரே நேரத்தில் அனைவரும் ஏறியதால் பஸ் முழுவதும் மாணவ மாணவிகள் நிரம்பி மாணவர்கள் பஸ்ஸில் படிக்கட்டுகளில், தொங்கிச்செல்லும் அவல நிலை ஏற்பட்டது. இந்த பகுதி மாணவ மாணவிகள் தொடர்ந்து கூடுதல் பஸ் கேட்டு கோரிக்கை வைத்துள்ள நிலையில், போக்குவரத்து துறையும் அரசும் இதுவரை செவி சாய்க்காததால் ஆபத்தான நிலையில், மாணவ மாணவிகள் பயணம் செய்யக்கூடிய துர்பாக்கிய நிலை உள்ளது. ஆகையால் மாணவ மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.