• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

டிச.22ல் நாடு தழுவிய போராட்டம்..!

Byவிஷா

Dec 20, 2023

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், வருகிற டிச.22ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இந்தியா கூட்டணி அறிவித்துள்ளது.
டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் 4-வது ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், சோனியாகாந்தி, மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி, டி.ஆர்.பாலு. சீத்தாராம் யெச்சூரி, சரத்பவார், லாலு பிரசாத், நிதிஷ்குமார், மெகபூபா முப்தி, மம்தா பானர்ஜி. அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே ஆகிய தலைவர்கள் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற தேர்தல் வியூகம் மற்றும் தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில், வரும் டிசம்பர் 22-ஆம் தேதி அனைத்து எதிர்கட்சிகளும் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது. எங்களின் இலக்கு வெற்றி தான், வெற்றிக்கு பிறகு தான் பிரதமர் யார் என முடிவு. பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்ற பின் எங்களிடம் போதுமான எம்.பிகள் இருப்பார்கள். அதன் பின் ஜனநாயக முறைப்படி பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.