• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

15 ஆண்டுகளுக்கு பிறகு மஹா கும்பாபிஷேகம் – தமிழகம், புதுவையிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்…

ByKalamegam Viswanathan

Dec 2, 2023
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அச்சம்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி ராமாக்கம்மாள், ஸ்ரீ கருப்பசாமி திருக்கோவில்களில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

அச்சம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பழமைவாய்ந்த ஸ்ரீதேவி ராமாக்கம்மாள், ஸ்ரீ கருப்பசாமி திருக்கோவிலை 15 ஆண்டுக்கு பின் புதிதாக புரைமைத்த அக்கிராம நிர்வாகிகள், மஹா கும்பாபிஷேக விழாவினை வெகுவிமரிசையாக நடத்தினர். இச்சமூக (தெலுங்கர்) இனமக்கள் தமிழகம் மட்டுமின்றி புதுவை மற்றும் அயல்நாடுகளில் உள்ளனர். இவர்கள் அனைவரும் இவ்விழாவினையொட்டி, இக்கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கூடினர். முன்னதாக, கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் 2 நாட்களாக நடைபெற்று, அங்கு பூஜிக்கப்பட்ட கலச தீர்த்தங்களை வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க கோபுரங்களின் மேல் உள்ள கலசங்களுக்கு புனிதநீரை ஊற்றி மஹா சம்ப்ரோக்ஷணம் செய்தனர். இதனைத் தொடர்ந்து, புனிதநீர் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, கோவில் நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர்.