• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சிவகங்கையில் ஓட்டு எண்ணும் மையம் அமைக்க கோரிக்கை..!

ByG.Suresh

Nov 25, 2023

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் லோக்சபா, சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணும் மையத்தை ஏற்படுத்த வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் சார்பில் மாநில தேர்தல் கமி ஷனருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை லோக்சபா தொகுதியின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்தூர், மானாமதுரை ஆகிய 4 சட்டசபை தொகுதிகளும், புதுக்கோட்டை மாவட்டத் தில் ஆலங்குடி, திருமயம் ஆகிய இரு சட்டசபை தொகுதிகள் உள்ளன. எம்.எல்.ஏ., தேர்தலில் ஓட்டு எண்ணும் பணி தொடர்ந்து காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு இன்ஜினியரிங் கல்லூரி யில் வைத்தே நடத்தப்பட்டு வருகிறது.
எம்பி தேர்தலில்போதும் அதே கல்லூரியில் 4 சட்டசபை தொகுதி களுக்கும், ஆலங்குடி, திருமயம் சட்டசபை ‘தொகுதி ஓட்டும் எண்ணும் பணி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடத்துகின்றனர். ஆரம்பத்தில் சிவகங்கையில் தான் எம்.பி., எம். எல்.ஏ., தேர்தலுக்கான ஓட்டு எண்ணும் மையம் இருந்தது. காலப்போக்கில் இந்த மையத்தை காரைக் குடிக்கு மாற்றம் செய்து விட்டனர். அனைத்து மாவட்டங்களிலும் தலைநகரில் தான் ஓட்டு எண்ணும் பணி நடக்கும். ஆனால் சிவகங்கையில் மட்டும் தான், காரைக்குடி யில் நடத்துகின்றனர். இதனால் சிவகங்கையிலேயே ஓட்டு எண்ணும் பணி மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
தேசியவாத காங்கிரஸ்., மாவட்ட தலைவர் ஆர். பெரோஸ்காந்தி தெரிவிக்கையில் இதை தொடர்ந்து வலியுறுத்தி தேர்தல் கமிஷன் மற்றும் கலெக்டர்களிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். மாவட்ட தலைநகரில்தான் ஓட்டு எண்ணும் பணி நடக்க வேண்டும். சிவகங்கையில் அரசு மன்னர் துரைசிங்கம் கல்லூரி, அரசு மகளிர் கல்லூரி, அரசு மருத்துவ கல்லூரி என அனைத்து கட்டமைப்பு வசதிகளும் உள்ளன என்றார்.