• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் உட்பட இருவர் மீது மோசடி வழக்குபதிவு…

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் உட்பட இருவர் மீது மோசடியில் ஈடுபட்டதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் உதவியாளராக இருந்த மணி. இவர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரிடம் உதவி பொறியாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி கொண்டு 17 லட்சம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளர்.

பாதிக்கப்பட்ட நபர் தமிழ்செல்வன் கொடுத்த புகாரின் பெயரில் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் மணி மற்றும் மணியின் உதவியாளர் செல்வக்குமார் ஆகிய இருவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெறுதல் மற்றும் பணம் வாங்கிக்கொண்டு மோசடி ஈடுபடுதல் ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்குபதிவு செய்து டிஎஸ்பி இளமுருகன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே ஓமலூர் செம்மாண்டப்பட்டி பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகி செல்வகுமார் என்பவரிடம் 77 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக மணியின் மீது புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.