• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ இயக்குநரின் அடுத்த படைப்பு

Byமதி

Oct 25, 2021

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ இந்திய பெண்களின் வாழ்வியலை அழகாக படம்பிடித்து அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தவர் ஜோ பேபி. இவர் அடுத்தபடியாக ஆந்தாலஜி படம் ஒன்றில் பங்காற்றுகிறார்.

ஆந்தாலஜி படமான இதற்க்கு `சுதந்திர சமரம்’ அதாவது சுதந்திரப் போராட்டம் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், ஆறு பேர் உள்ளனர், அவர்களின் கண்கள் மங்கலாக்கப்பட்டு பாட்டில் மற்றும் டேப் ரெக்கார்டர் என்பது போன்ற பொருட்களை ஒவ்வொருவரும் கையில் வைத்திருக்கிறார்கள். ஜோ பேபி உடன் குஞ்சிலா மாசில்லாமணி, அகில் அனில்குமார், பிரான்சிஸ் லூயிஸ், ஜிதின் ஐசக் தாமஸ் போன்ற இயக்குநர்கள் இந்த ஆந்தாலஜி படத்தை இயக்கப்போவதாக அந்தப் போஸ்டரில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.