• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

விபத்தில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்த அரசு பள்ளி ஆசிரியை மஞ்சுளாவுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது…

ByNamakkal Anjaneyar

Nov 5, 2023

திருச்செங்கோடு ஒன்றியம் தோக்கவாடி குச்சிபாளையம் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா. இவர் ஆலாம்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிரார்.

கடந்த 3 ஆம் தேதி எஸ்.பி.பி. காலனி வாய்க்கால் பாலம் பகுதியில் காலை 8.30 மணி அளவில் இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்தார். இரு வேறு தனியார் மருத்துவமனைகளுக்கு கேஎம்சிஎச் ராயல் கேர் போன்ற பெரும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்ற நிலையில் மூளைச்சாவடைந்ததை காப்பாற்ற முடியாது என்று தெரிய வந்ததை அடுத்து மஞ்சுளாவின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

பெருந்துறை சானிடோரியம் மருத்துவமனையில் பத்து நபர்கள் வரை அவரது கிட்னிகள் கண்கள் சதைகள், இதயம் போன்ற உறுப்புகள் பல்வேறு பெரும் தனியார் மருத்துவமனைகளுக்கு தானம் செய்யபட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் முதல் உடல் உறுப்பு தானம் செய்த அரசு ஊழியருக்கு அரசு மரியாதை செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர் DR. உமா உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் சார்பில் அவரது இல்லத்தில் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த சம்பவம் ஒரு நெகிழ்ச்சியையும் அவரது கணவர் ஈஸ்வரன் மற்றும் அவரது மகள் பூங்குளலி இருவருக்கும் மீலா துயரையும் கொடுத்துள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் DR. உமா கூறும் போது,

இந்த சம்பவம் உடல் உறுப்பு தானம் என்பதன் காரணமாக பல்வேறு உயிர்கள் வாயிலாக ஆசிரியர் மஞ்சுளா நம்முடன் வாழ்ந்து வருகிறார் இருந்தபோதிலும் இதுபோன்ற ஒரு அரசு பள்ளி ஆசிரியர் ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்துக்குள்ளானது மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளது எனவே இனி ஒரு சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் இது போல நடைபெறாமல் இருக்க மக்கள் ஹெல்மெட் அணிவது அவசியம் என வலியுறுத்தி பேட்டியில் தெரிவித்தார்

இது தொடர்பாக அவரது கணவர் ஈஸ்வரன் கூறும் போது,

பல்வேறு பெரும் தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றோம் காப்பாற்ற முடியாது என்று தெரிந்த நிலையில் பெருந்துறை சானிடோரியம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இருதய துடிப்பு நிற்க சிலமணி நேரங்களே இருந்த விரைந்து செயல்பட்டு தனது மனைவியின் உறுப்புகளை மற்ற நபர்களுக்கு மாற்றி அவர்கள் உயிர் வாழ ஏற்பாடு செய்தது மிகுந்த மனநிறைவு ஏற்பட்டதாகவும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் அனைத்து உதவிகளும் உடனடியாக செய்து கொடுத்ததாகவும் தெரிவித்தார்.