• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மழை நீருடன் சாயப்பட்டறை கழிவுகளும் கலந்ததால், சுண்ணாம்புக் கலவை பகுதியில் நுரைகள்..,

ByKalamegam Viswanathan

Nov 2, 2023

கோவையில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. மழை நீருடன சாயப்பட்டறை கழிவுகளும் மழை நீருடன் கலந்துள்ளது. இதன் காரணமாக ஆத்துப்பாலம் சுண்ணாம்பு காலவாய் பகுதியில் தண்ணீர் செல்லும் பாதையில் நுரை பெருக்கெடுத்துள்ளது. பல மீட்டர் தொலைவிற்கு வெண்ணிறத்தில் நுரை தேங்கி இருப்பதை பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர். இதனிடையே இன்று காலை 8 மணி வரையிலான மழை அளவினை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.இதில் கோவை பீளமேடு பகுதிநில் 6.1 சென்டிமீட்டர் மழையும், கோவை தெற்கு பகுதியில் 5.6 செ.மீ, தொண்டாமுத்தூர் பகுதியில் 5.9 செ.மீ, வேளாண் பல்கலை பகுதியில் 5.2 செ.மீ மழையும் பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை நேரத்திலும் வானம் மேக மூட்டத்துடன், குளிர்ந்த காலநிலையுடன் காணப்படுகின்றது.