• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அலுவலர்கள் மற்றும் பேராசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழக ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

ByKalamegam Viswanathan

Nov 2, 2023

மதுரை காமராஜர் பல்கலைக்கழக அலுவலர்கள் மற்றும் பேராசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் துணைவேந்தர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சுதந்திரப் போராட்ட வீரர் சங்கர் அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்காததை கண்டித்தும், பல்கலைக்கழகத்தில் ஒரு தலைப்பட்சமாக செயல்படும் நிர்வாகத்தை கண்டித்தும், பல்கலைக்கழக ஊழியர்களுக்கு தாமதமான சம்பளம் வழங்குவதை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழக தலைவர் வேளாங்கண்ணி ஜோசப் தலைமையில் துணைவேந்தர் அலுவலக வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் 17 பெண்கள் உட்பட 100 பேர் கலந்து கொண்டனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஊழியர் சங்க கூட்டு அமைப்பின் தலைவர் முத்தையா கூறுகையில், பல்கலைக்கழகத்தில் ஆட்சி மன்ற குழு தீர்மனத்தின் படி, சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரை அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்க, பரிந்துரை செய்ததை செனட் ஒப்புதலுடன் அனுப்பப்பட்டதை ஆளுநர் நிராகரித்ததை கண்டித்தும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக நிர்வாகம் ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாகவும், ஆளுநருக்கு அழைப்பிதழ் வழங்கி உயர் கல்வித்துறை அமைச்சருக்கு அழைப்பிதழ் வழங்க மறுத்ததை கண்டித்து, காமராஜர் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு தாமதமாக ஊதியர் வழங்குவதை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.