• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

நள்ளிரவில் பெய்த மின்னலுடன் கூடிய கனமழை – சாலை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்த கோவை.

BySeenu

Nov 2, 2023

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன் படி கோவை மாவட்டத்தில் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் மப்பும் மந்தரமாக காணப்பட்டது.


இந்நிலையில் கோவை மாநகர பகுதியில் நள்ளிரவில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. சிங்காநல்லூர், காந்திபுரம், உக்கடம், பீளமேடு உள்ளிட்ட பகுதியில் பெய்த மின்னலுடன் கூடிய மழையால் சாலை முழுவதும் மழை நீர் வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதனால் இரவு நேரங்களில் செல்ல கூடிய வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். அதே போல புறநகர் பகுதிகளிலும் இரவு முழுவதும் கனமழை பெய்து வந்தது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.