• Tue. Sep 23rd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

கோவையில் நட்சத்திர ஹோட்டலான – ஓ பை தாமரா ( O By Tamara ) துவக்கம்..,

BySeenu

Nov 1, 2023

தென்னிந்தியாவின் முன்னனி நிறுவனமான, தாமரா லெஷர் எக்ஸ்பீரியன்ஸ், தனது இரண்டாவது நட்சத்திர ஹோட்டலான . ஓ பை தாமரா ( O By Tamara ) கோவையில் துவங்கப்பட்டது.

தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான, கோவை சிங்காநல்லூரில் ஓ பை தாமாரா ஹோட்டல் அமைந்துள்ளது. ஐந்து நட்சத்திர அம்சங்களுடன், 141 அறைகளுடன், அனைத்து வசதிகளுடன் பிரம்மாண்டமாக துவங்கப்பட்டுள்ள ஓ பை தாமரா குறித்து, தாமரா லெஷர் எக்ஸ்பீரியன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் இயக்குநருமான ஸ்ருதி ஷிபுலால் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது பேசிய அவர்,கோவையின் முக்கிய பகுதிகளான விமான நிலையம்,இரயில் நிலையம் மற்றும் முக்கிய பகுதிகளுக்கு அருகில் ஓ பை தாமரா ஓட்டல் அமைந்துள்ளதாக கூறிய அவர், தாமரா லெஷர் எக்ஸ்பீரியன்ஸ் நிறுவனத்தின் கீழ், இந்தியாவில் 6 வது மற்றும் தமிழ்நாட்டில் 2வது ஹோட்டலை எங்கள் விருந்தினர்களுக்காக திறப்பதில் மகிழ்ச்சியடைவதாக கூறினார்.

இங்கு வரும்,விருந்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நேர்த்தியான வேலைப்பாடுகளுடன், 141 அறைகளுடனும் விசாலமாக , சகல வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அறையும் பிளாட் -ஸ்கிரீன் டிவி, அதிவேக வை–பை மற்றும் பணிச்சூழல்களுக்கான பிற பர்னிச்சர் போன்ற நவீன வசதிகளைக் கொண்டுள்ளது, மேலும் உயர் தர வசதகளுடன்,உணவகம்,லைவ் கவுண்டர்கள், பிரத்யேக பஃபேக்கள், உலகளாவிய பல்வேறு வகையான சிறப்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. லா பெல்லா விட்டா (LBV) என்ற பிரத்யேக இடமான காபி, பேஸ்ட்டீரிஸ், சுட சுட தயாரிக்கப்படும் உணவுகளால் நாவின் சுவை அரும்புகள் மலரும். உயர் டைவ், சிறந்த உணவு, இனிமையான இசையுடன் ரசிக்க இடமான இங்கு, தங்கள் அன்பானவர்களுடன் கூடிமகிழ சிறப்பான அனுபவத்தை தருகிறது. தவிர, ஓபன் நீச்சல் குளம், ஸ்பா சேவைகள், 24 மணி நேரம் செயல்படும் நவீன உடற்பயிற்சி மையம் உள்ளிட்ட வசதிகளும் விருந்தினர்களின் ஓய்வு நேர தேவைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. 7000 சதுர அடியில் பரந்துவிரிந்துள்ள ஓ பை தாமரா கோவை நிறுவனத்தில், கூட்டங்கள் நடத்தவும், சமூகநிகழ்வுகளுக்கும், சிறந்த தேர்வாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.. இந்த சந்திப்பின் போது, எஸ்.ஆர்.வி.பி.ஆபரேஷன்ஸ் மனோஜ் மேத்யூ,பொது மேலாளர் உமாபத், இயக்குனர் குமாரி ஷிபுலால்,மற்றும் ஜாய் டேமல்,ஆகியோர் உடனிருந்தனர்.