• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சுசீந்திரம் முன்னுதித்த நங்கை பல்லாக்கை சுமந்து சென்ற, கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த்..,

குமரி- பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து நவராத்திரி விழாவிற்காக கேரளாவுக்கு புறப்பட்ட சாமி விக்கிரகங்கள் அமைச்சர்கள், எம்.பி ,சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு..,

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வரும் 15ம் தேதி துவங்க உள்ள பாரம்பரியமிக்க நவராத்திரி விழாவில் பங்கேற்க குமரி சுவாமி விக்கிரகங்களான சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, குமாரகோயில் முருகன், பத்பநாதபுரம் தேவாரகட்டு சரஸ்வதி போன்ற சாமி விக்கிரகங்கள் பத்பநாபபுரம் அரண்மனையில் இருந்து மன்னர்கால பாரம்பரிய முறைபடி உடைவாள் கைமாறபட்டது. தமிழக- கேரளா போலீசார் அணிவகுப்பு மரியாதையுடன் யானை மீது சரஸ்வதி தேவியும், பல்லக்குகளில் குமார கோயில் முருகனும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கையும் ஊர்வலமாக புறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், மத்திய அமைச்சர் முரளிதரன், கேரள தேவசம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் , கோவளம் சட்டமன்ற உறுப்பினர் வின்சென்ட், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் உட்பட தமிழக, கேரளா-வை சேர்ந்த ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். இன்று இந்த சாமி விக்கிரகங்கள் குழித்துறை மகாதேவர் ஆலயத்திலும், மறு நாள் காலை புறப்பட்டு, மதியம் குமரி- கேரளா எல்லை பகுதியான களியக்காவிளையில் கேரளா இந்து அறநிலையத்துறை அதிகாரியிடம், தமிழக இந்து அறநிலைய துறை அதிகாரிகள் சுவாமி விக்கிரகங்களை ஒப்படைப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அங்கிருந்து சாமி விக்ரங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அங்கு 10 நாட்கள் நடைபெறும் நவராத்திரி பூஜையில் வைக்கப்பட்ட பின்னர் குமரிக்கு கொண்டு வரப்படுகிறது.