கேரளாவுக்கு கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கனிம வளங்கள் ஏத்திச்சென்ற டாரஸ் லாரியில் இருந்து நான்கு டன் அளவிலான பாறை, பள்ளி சாலையில் டாரஸ் லாரியில் இருந்து விழுந்ததை கண்டித்து இறச்சக்குளம் சந்திப்பில் பொதுமக்கள் சாலை மறியல்-இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் பொதுமக்கள் அவதி- மேலும் வாகனங்கள் இவ் வழியாக கனரக வாகனங்கள் வரக்கூடாது என கோரி சாலைமறியலில் அப்பகுதி பொதுமக்கள் ஈடுபட்டு வருவதால் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து தடைப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகிறது,கன்னியாகுமரி மாவட்ட குவாரிகளில் இருந்து மலைகளைக் குடைந்து பாறைகள் கொண்டு செல்லப்பட்டு வந்தன, இதனால் குமரி மாவட்டத்தின் கனிம வளங்கள் பாதிக்கப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து அனுமதி இல்லாத குவாரிகள் நிறுத்தப்பட்டன மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து கேரளாவிற்கு கனரக வாகனங்களில் பாறைகள் கன்னியாகுமரி மாவட்ட வழியாக சென்று கேரளாவில் அடைந்து வந்தது இதனால் சாலைகளில் விபத்துகள் ஏற்பட்டு ஏராளமான உயிர் பலிகள் நடந்தன, அதனை தொடர்ந்து பத்து டயர் உள்ள கனரக வாகனங்கள் செல்ல கூடாது என தமிழக அரசும் நீதிமன்றமும் தெரிவித்தது அதனை தொடர்ந்து சில காலங்கள் அவ்வழியாக செல்லாமல் இருந்தன மீண்டும் அனுமதி பெற்று வாகனங்கள் இறச்சகுளம் வழியாக திருவனந்தபுரம் சென்று வருகிறது இந்நிலையில் இன்று இறச்சகுளம் அமிர்தா கல்லைரி வழியாகச் சென்ற கனரக லாரியில் இருந்த நான்கு டன் பாறை அவ்வழியில் உள்ள அரசு பள்ளி முன்பு விழுந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது இதனால் அப்பகுதியினர் உடனடியாக இதனை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர் காலை நேரம் என்பதால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் என பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயற்சிக்கின்றனர் ஆனால் அவர்கள் அதிகாரிகள் வந்து இந்த வழியாக வாகனங்கள் செல்லக்கூடாது செல்ல மாட்டோம் என உத்தரவாதம் தந்தால் கலைந்து செல்வோம் என்று சுமார் ஒரு மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் அவ்வழியை இரண்டு கிலோமீட்டர் அங்கும் இங்குமாக பேருந்துகள் போக்குவரத்து சிக்கலில் மாட்டியுள்ளது இதனால் விரைவுபடை போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
