• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வருகிறது சென்னை புறநகரில் புதிய தீம் பார்க்..!

Byவிஷா

Sep 27, 2023

தமிழகத்தில் சென்னை புறநகரில் 100 ஏக்கர் பரப்பளவில் புதிய தீம் பார்க் வர இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கண்ணை கவரும் மற்றும் மனதை உருக்கும் வகையில் மக்களை மகிழ்விக்கும் வகையிலான பல சுற்றுலாத் தலங்கள் உள்ளன. குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் இந்த சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகளவு இருக்கும். தற்போது தமிழக சுற்றுலாத்துறை கொள்கை விளக்க குறிப்பில் அமெரிக்காவில் உள்ள டிஸ்னி தீம் பார்க் போல தமிழகத்தில் சென்னை புறநகரில் 100 ஏக்கர் பரப்பளவில் தீம் பார்க் ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த திட்டத்திற்கான பணிகள் தனியார் பங்களிப்புடன் ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்வார்கள். இதனால் சுற்றுலாத்துறை வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.