• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நீதியின் பல முகங்களை அறிமுகப்படுத்திய ஷாருக்கான்

Byஜெ.துரை

Aug 26, 2023

ஜவான் மல்டிஃபேஸ் போஸ்டர் வெளியீடு, ஷாருக்கின் பல அவதாரங்களை வெளிப்படுத்தும், ஜவான் மல்டிஃபேஸ் போஸ்டர் வெளியீடு.

செப்டம்பர் 7 ஆம் தேதியை, உங்கள் நாட்காட்டியில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள், SRK தனது வித்தியாசமான முகங்களை திரையில் வெளிப்படுத்தப்போகிறார்.

“ஜவான்” ப்ரிவ்யூ வெளியானதிலிருந்தே, ஷாருக்கானின் தோற்றம் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது ப்ரிவ்யூவில் இடம்பெற்ற முக்கிய அம்சம் நடிகர் ஷாருக்கானின் பலவிதமான தோற்றங்கள் தான். ஒவ்வொரு தோற்றத்திற்கும் பின்னால் என்ன கதை உள்ளது என அறிந்துகொள்ளும் தீராத ஆர்வத்தை எழுப்பியுள்ளது ப்ரிவ்யூ.

“ஜவான்” திரைப்படத்திலிருந்து, நடிகர் SRK-ன் அனைத்து அவதாரங்களையும் ஒரே சட்டகத்தில் கொண்டு வந்து, ஒரு புதிய போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த போஸ்டர் படத்தில் ஷாருக்கின் ஐந்து வெவ்வேறு தோற்றங்களையும் அற்புதமாக காட்டுகிறது. இந்த மாறுபட்ட அவதாரங்களுக்கு, SRK சிரமமின்றி மாறுவது அவரது குறிப்பிடத்தக்க பன்முகத்திறனுக்கு ஒரு பெரும் சான்றாகும்.

“ஜவான்” சந்தேகத்திற்கு இடமின்றி நாம் பார்த்திராத SRK ன் பல வித்தியாசமான அவதாரங்களை, பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தவுள்ளது.

“ஜவான்” திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.