• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீஅய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா..!

ByKalamegam Viswanathan

Aug 23, 2023

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வெள்ளையம்பட்டி பெரியகுளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அய்யனார் திருக்கோவில் 21 பந்தி 61 சேணை மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. மங்கல இசை முழங்க இரண்டு கால யாக பூஜையுடன் கோ பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, மகா பூர்ணாவூதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை 21 பந்தி அய்யனார் கோவில் பங்காளிகள் செய்திருந்தனர்.