• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விலைவாசி உயர்வை கண்டித்து, அதிமுக ஆர்ப்பாட்டம்…

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு திடலில் முன்பு. திமுக அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரான தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சரான கே.டி.பச்சைமால் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினார்கள்.

தமிழக முழுவதும் காய்கறி விலை உயர்வு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் திமுக அரசை நோக்கிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு மாவட்ட அவைத் தலைவர் சேவியர் மனோகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 300_க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர், மேலும் இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர்ருமான தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக பேசினார். அப்போது கூறுகையில், அதிமுக ஆட்சியில் ஒரு குடும்பம் பத்தாயிரம் ரூபாய் வருமானம் இருந்தால் நிம்மதியாக வாழ முடியும். ஆனால் திமுக ஆட்சி காலத்தில் 20 ஆயிரத்துக்கு மேல் வருமானம் வந்தாலும் குடும்பங்கள் தவிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது காரணம் விலைவாசி உயர்வு காய்கறிகள் தக்காளி, உள்ளி, இஞ்சி, பச்சை மிளகு அனைத்து பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது,இதனால் மக்கள் தவித்து வருகின்றனர், அதேபோன்று எடப்பாடி யாருக்கு துரோகம் செய்த யாரும் வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது, அதற்கு உதாரணம் புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி எனவும் திமுக அரசை கண்டித்து தனது கண்டனங்களை தெரிவித்தார்கள்.

காய்கறிகள் விலை உயர்வு என்பதை வெளிப்படுத்தும் வகையில்.பெண்கள் வெண்டைக்காய், தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை உருவாக்கிய மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு நின்றது புதுமையாக அதே நேரத்தில் பல்வேறு வகையான காய்கறிகளின் விலை உயர்வை உணர்த்தும் அடையாளமாகவும் இருந்தது.