• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மாமன்னன் திரை விமர்சனம்

Byஜெ.துரை

Jun 30, 2023

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில், லால், சுனில் என பலரும் நடித்துள்ள படம் ‘மாமன்னன்’. ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

அடங்கி நடக்க வேண்டும் என நினைக்கும் ஆதிக்க வர்க்கத்தினர் சமூகத்தில் முன்னேற நினைத்து அனைவரையும் சமமாக பார்க்க சொல்லும் பட்டியலின மக்கள் என மாரி செல்வராஜின் முந்தைய படங்களைப் போல ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தையும் அரசியலையும் ஆதிக்க சாதியினர் தங்களுக்கு சாதகமாக எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று உணர்த்தி இருக்கிறது.
மாமன்னன் சமூகநீதி சமத்துவ மக்கள் கழகத்தின் மாவட்டச் செயலாளர் ஆதிக்க வர்க்கத்தை சார்ந்த ஃபகத் பாஸில் அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ பட்டியலின சமூகத்தைச் சார்ந்த வடிவேலின் மகனாக உதயநிதி ஸ்டாலினும் அவரது காதலியாக கீர்த்தி சுரேஷும் வருகின்றனர்.

உதயநிதியின் இடத்தில் கீர்த்தி சுரேஷ் நடத்தி வரும் இலவச கல்வி மையத்தை ஃபஹத் ஃபாசில் அண்ணனாக வரும் சுனில் சேதப்படுத்துகிறார். அதை பார்த்து கொந்தளித்து எழுகிறார் உதயநிதி. அதன் பிறகு நடந்த பிரச்சினைகள் என்ன? படத்தின் முடிவில் யார் ஜெய்த்தது என்பதே படத்தின் கதை. மாமன்னனின் படத்தில் நடித்த அனைவரும் கனகச்சிதமாக தங்களுடைய கேரக்டரை திறம்பட செய்துள்ளார்கள்.

சில காட்சிகள் கண் கலங்க வைப்பதும் சில காட்சிகள் படம் பார்ப்பவர்களை வெகுண்டெழவும் வைக்கிறது. ஒருபக்கம் வடிவேலு, இன்னொரு பக்கம் ஃபஹத் பாசில் என நடிப்பில் மிரட்டியிருக்கிறார்கள்.

மிரட்டலான முதல் பாதி, கதை யூகிக்க வைக்கும் இரண்டாம் பாதி என்றாலும் சலிப்பு தட்டாத திரைக்கதை மாமன்னன் படம் பார்ப்பவர்களை ரசிக்க வைத்துள்ளது.

மேலும் வலுசேர்க்கும் விதமாக ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைந்துள்ளது.

பாடல்கள் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தாலும் படத்திற்கு தடையாக அமையவில்லை.

மொத்தத்தில் மாமன்னன் திரைப்படம் ஒரு மணிமகுடம்.