• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jun 12, 2023
  1. ஒரு பொருள்களின் மீது செயல்படும் புவி ஈர்ப்பு விசை என்பது என்ன?
    அதன் எடை.
  2. திரவங்களின் கன அளவைக் காண உதவும் கருவி எது?
    கொள்கலன்
  3. வரைப்படத்தாள் முறையில் கண்டறிவது எது?
    ஒழுங்கற்ற பொருளின் பரப்பு
  4. அளவுகோலின் அளவீடுகளை செங்குத்தாகப் பார்க்காததால் தோன்றும் குறை?
    இடமாறுதோற்றப்பிழை
  5. கன அளவின் அலகு?
    மீ3
  6. திரவங்களின் கன அளவை காணப்பயன்படும் அலகு எது?
    லிட்டர்
  7. காஸ்ட்ரோஸ்கோப்பி செயலாற்றும் இடம் எது?
    இரைப்பை
  8. அதிக நீர் அருந்தும் நிலையின் பெயர் என்ன?
    பாலிடிப்சியா
  9. கண் லென்சின் ஒளிபுகும் தன்மை குறைபாட்டினால் உண்டாகும் நோய் எது?
    கண்புரை
  10. விழிப்படலத்தில் புண்கள் தோன்றி நோய் தொற்று ஏற்படும் நிலை?
    கெரட்டோமலேசியா