• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

ரஜினிகாந்த் பாராட்டிய அயோத்தி

Byதன பாலன்

Apr 11, 2023

சசிகுமார், இந்தி நடிகர் யஷ்பால் சர்மா, பிரீத்தி அஸ்ரானி உட்பட பலர் நடிப்பில் மார்ச் 3 அன்று வெளியான படம் ‘அயோத்தி’. டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ரவீந்தீரன் தயாரித்த இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கி இருந்தார். மனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் பேசிய இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
இந்தி மற்றும் தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட உள்ளதுஅயோத்திஇந்த சூழலில் ரஜினிகாந்த் இந்தப் படத்தை பாராட்டியுள்ளார்.

“அயோத்தி… நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம். முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்!” என ரஜினிகாந்த் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்
அவரது பாராட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சசிகுமார். இதனை தனதுசமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

“நடிகர் எனக் குறிப்பிடாமல், நண்பர் என்று சொன்னதிலேயே மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் சார். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், மிக எளிய படைப்பாக வந்திருக்கும் ‘அயோத்தி’ படத்தை பார்த்துப் பாராட்டியது நல்ல படைப்புகளுக்கான பெரிய நம்பிக்கை கொடுக்கிறது. மிக்க நன்றி சார்” என சசிகுமார் ட்வீட் செய்துள்ளார். இதில் சூப்பர்ஸ்டார் மற்றும் பேட்ட மாலிக் என்ற ஹேஷ்டேக்கை அவர் பயன்படுத்தியுள்ளார்.ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘பேட்ட’ படத்தில் சசிகுமார் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.