• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரையில் பாஜக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

Byp Kumar

Mar 28, 2023

மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .மதுரை மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஐயப்ப ராஜா தலைமை தாங்கினார் .துணை தலைவர் அருண் தமிழரசன், பொறுப்பாளர் அமிழ்தன் ஆகியோர் வரவேற்றனர். மாநில செயலாளர் பால்பாண்டி கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார் .

ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் மீதான தொடர் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் .சென்னை பெருங்குடியில் கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் ஜெய் கணேஷ் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூபாய் ஒரு கோடி நிதி வழங்க வேண்டும் . தமிழக அரசு வழக்கறிஞர் பாதுகாப்பு சட்ட மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஜெயதேவன், ஜெய முருகன் ,சந்திரமோகன், வடிவேலன், சுந்தரவடிவேல் உள்பட 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.