• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

ஈரோடு தொகுதியில் காங்கிரஸ் தான் போட்டியிடும்- கே.எஸ்.அழகிரி

ByA.Tamilselvan

Jan 19, 2023

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் போட்டியிட்டு எனவே அத்தொகுதியில் எங்கள் கட்சிதான் போட்டியிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகரி பேச்சு
சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே கவர்னரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டம் முடிந்ததும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசும் போது … ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற தொகுதி. எனவே இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் தான் போட்டியிடும். வேட்பாளர் யார் என்பது இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும். எங்கள் கூட்டணி கட்சிகளான தி.மு.க., ம.தி.மு.க.. விடுதலை சிறுத்தைகள் மற்றும் பொதுவுடைமை கட்சி தலைவர்களை இன்று மாலை முதல் சந்திக்க உள்ளோம். ஈரோட்டில் காங்கிரஸ் வெற்றிக்கு அவர்கள் ஆதரவை கோர இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.