• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

டெல்லிருந்து ஆளுனர் ஆர்.என்.ரவி இன்று இரவு சென்னை திரும்புகிறார்

ByA.Tamilselvan

Jan 19, 2023

அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பார் என எதிர்பாக்கப்பட்ட நிலையில் டெல்லி சென்ற ஆளுனர் இன்று இரவு சென்னை திரும்புகிறார்.
தமிழக ஆளுனர்ஆர்.என்.ரவி நேற்று காலை 2 நாள் பயணமாக டெல்லி சென்றிருந்தார். தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்த அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று மதியம் வரை அவர் அமித்ஷாவை சந்திக்கவில்லை. இந்த நிலையில்ஆளுனர்ஆர்.என்.ரவி டெல்லியில் இருந்து இன்று மாலை சென்னை திரும்புகிறார். சென்னைக்கு அவர் இரவு 8.20 மணிக்கு வந்தடைவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே கடந்த 13-ந்தேதி கவர்னர் டெல்லி சென்று வந்த நிலையில் நேற்று மீண்டும் டெல்லிக்கு சென்றதால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.