• Thu. Jan 15th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஜீவரக்ஷய் குடிபோதை மற்றும் மனநல மறுவாழ்வு மையத்தின் மூன்றாம் ஆண்டு விழா

Byதரணி

Dec 19, 2022

சென்னை வளசரவாக்கத்தில் ஜீவரக்ஷய் குடிபோதை மற்றும் மனநல மறுவாழ்வு மையத்தின் மூன்றாம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
சென்னை வளசரவாக்கத்தில் இயங்கி வரும் ஜீவரக்ஷய் குடிபோதை மற்றும் மனநல மறுவாழ்வு மையத்தின் மூன்றாம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக வளசரவாக்கம் சரக காவல் உதவி ஆணையர் கவுதமன், தென்னிந்திய பத்திரிகையாளர் மன்றத்தின் மாநில தலைவர் நாகராஜன், வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் முகமதுபரகத்துல்லா, வேர்ல்ட் சிட்டிசன் டாக்டர் ஜோசப், உமன்ஸ் விங்ஸ் நேஷனல் ப்ரெசிடெண்ட் டாக்டர் அமலோற்பவராணி ஆகியோர் கலந்துகொண்டனர்.


சிறப்பு விருந்தினர்களை மையத்தின் நிருவனர் டாக்டர் அருணா வரவேற்று பேசினார். தொடர்ந்து மையத்தில் சிகிச்சை பெற்றுவருபவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள், மன நல ஆலோசகர்கள், செவிலியர்கள், ஊழியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய வளசரவாக்கம் காவல் உதவி ஆணையர் கவுதமன், குடிபோதைக்கு அடிமையானவர்களால் ஏற்படும் குற்றங்களை தடுக்க இம்மாதிரியான மறுவாழ்வு மையங்கள் உதவுவதாக கூறிய அவர், இம் மையத்தின் தன்னலமற்ற சேவையை பாராட்டுவதாக அவர் தெரிவித்தார்.