• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனை சாவடி சி.சி.டி.வி காமிராக்கள் பழுது

கோடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனை சாவடியில் பழுதடைந்த காமிராக்களை உடனடியாக சரிசெய்ய சமூகஆர்வலர்கள் வலியுறுத்தல்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நுழைவு வாயில் பகுதியாக இருக்கும் வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனை சாவடியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கேமராக்கள் தற்போது பழுதடைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் திருடப்பட்டு செல்லும் வாகனங்கள் அப்பகுதியின் வழியே செல்லும் போது பதிவுகள் இல்லாததால் திருடர்கள் எளிதாக தப்பிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் கொடைக்கானலில் தங்கி உள்ளனர். குற்றச்சம்பவங்களை தடுக்க நகரின் எல்லைப்பகுதியில் சி.சி.டி.வி காமிராக்கள் இல்லாமல் இருப்பது பல்வேறு சவால்களை போலீசாருக்கு ஏற்படுத்தும் என சமூகஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.