• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

டி20 தரவரிசை: சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. கடந்த 2 ஆம் தேதி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் முறையாக முதல் இடத்திற்கு முன்னேறி இருந்த சூர்யகுமார் யாதவ் (890 புள்ளிகள்) தற்போது அதை தக்கவைத்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் அதிரடி சதம் விளாசி இருந்த சூர்யகுமார் 31 புள்ளிகள் கூடுதலாக பெற்று 890 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் 836 புள்ளிகளுடன் இந்த பட்டியலில் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடிக்கிறார்.
அதே நேரத்தில் 3-வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். நியூசிலாந்தின் டெவோன் கான்வே 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களில் இந்திய வீரர்களில் சூர்யகுமார் யாதவ் மட்டுமே உள்ளார். இந்த பட்டியலில் கோலி 13-வது இடத்திலும், லோகேஷ் ராகுல் 19-வது இடத்திலும், ரோகித் சர்மா 21-வது இடத்திலும், இஷான் கிஷன் 33-வது இடத்திலும் ஹர்திக் பாண்டியா 50-வது இடத்திலும் உள்ளனர். பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவின் புவனேஸ்வர் குமார் 11-வது இடத்திற்கும், அர்ஷ்தீப் 21-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.
இந்த பட்டியலில் இலங்கை வீரர் ஹசரங்கா முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்) மற்றும் அடில் ரசித் (இங்கிலாந்து) உள்ளனர்.
ஐசிசி டி20ஐ பேட்டிங் தரவரிசை (நவம்பர் 23, 2022 நிலவரப்படி) சூர்யகுமார் யாதவ் – 890 புள்ளிகள், முகமது ரிஸ்வான் – 836 புள்ளிகள் டெவோன் கான்வே – 788 புள்ளிகள் பாபர் ஆசம் – 778 புள்ளிகள் ஐடன் மார்க்ரம் – 748 புள்ளிகள் டேவிட் மாலன் – 719 புள்ளிகள், கிளென் பிலிப்ஸ் – 699 புள்ளிகள் ரெய்லி ரூஸோ- 693 – புள்ளிகள், ஆரோன் பின்ச் – 680 புள்ளிகள், பதும் நிசாங்கா- 673 புள்ளிகள்.