கோவையில் 78வது சுதந்திர தின விழா. திமுக மாவட்ட விவசாய தொழிலாளர் அணி தலைவர் எம் சி சிவராமன் அவர்கள் தலைமையில் கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் நடைபெற்றது. இந்திய திருநாட்டின் 78 வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை ஹாய் கூகுள் பகுதி உட்பட்ட கோவில் நடுப்பகுதியில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, காலையில் 250 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டன. பின்பு சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பெரியோருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மதியம் அன்னதானம் சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டன. பின்பு மாலையில் விளையாட்டில் ஜெயித்தவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுகளும் பள்ளி குழந்தைகளுக்கு மற்றும் ஊர் பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் பள்ளி குழந்தைகள் சாய்பாபா காலனி பகுதி பெற்றுள்ள பெரியவர்கள் தாய்மார்கள் பலர் கலந்து கொண்டனர்.