• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

73வது குடியரசு தினம்! திரைபிரபலங்களின் வாழ்த்து!

நாடு முழுவதும் 73வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் முன்னணி நடிகர்களான அமிதாப் பச்சன், கமல்ஹாசன், மகேஷ் பாபு, பகத் ஃபாசில் என பல திரை நட்சத்திரங்கள், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் தங்களது குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்!.

அமிதாப் பச்சன்
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடியரசு தின வாழ்த்துக்களை நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார். தேசியக் கொடியுடன் மக்கள் வெள்ளம் தன்னை காண தனது வீட்டின் முன் இருக்கும் புகைப்படத்தை நடிகர் அமிதாப் பச்சன் ஷேர் செய்துள்ளார். மேலும், தனது தாடியையே தேசியக் கொடி போல மூன்று வர்ணங்களில் மாற்றிய த்ரோபேக் புகைப்படத்தையும் நடிகர் அமிதாப் பச்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்!

கமல்:

“இந்திய அரசியலமைப்புச் சட்டமே நம் ஒவ்வொருவரின் பலம். நாம்தான் இதன் பாதுகாவலர்கள் என்பதை உணர்வோம். அரசியலமைப்பு நமக்கு வழங்கி இருக்கும் சுதந்திரத்தின், அதிகாரத்தின், உரிமைகளின் உண்மையான மதிப்பை அறிந்து ஒற்றுமையுடன் கடமையாற்றுவோம். குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.” என உலகநாயகன் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பா. ரஞ்சித் ட்வீட்
இந்திய குடியரசின் தந்தை அம்பேத்கரை இந்த தேசமே இன்றைய நாளில் சல்யூட் செய்கிறது என அம்பேத்கரின் புகைப்படத்தை ஷேர் செய்து குடியரசு தின வாழ்த்துக்களை ஜெய்பீம் முழக்கத்துடன் கூறியுள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித்.

மகேஷ் பாபு
75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் குடியரசு தின விழாவை கொண்டாடுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். வீரத்துடன் இன்னுயிரை தந்து சுதந்திரம் பெற்றுத் தந்த தியாகிகளை இந்நாளில் நினைவு கூர்வோம் அமைதியையும் அன்பையும் எப்போதும் பேணுவோம் என நடிகர் மகேஷ் பாபு குடியரசு தின வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

பகத் ஃபாசில் வாழ்த்து
இந்திய தேசியக் கொடி பேக்ரவுண்டில் மலையாள நடிகர் பகத் ஃபாசில் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து ரசிகர்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை கூறியுள்ளார். மேலும், பல சினிமா பிரபலங்களும் குடியரசு தின வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.