சேலம் மேட்டுத் தெருவில் அமைந்திருக்கக் கூடிய சுகனேஷ்ஸ்வரர் ஈஸ்வரன் கோவில் பின்புற பகுதியில் வீடற்றவர்கள் பல்வேறு நபர்கள் மூடிக்கிடக்கும் கடைகளின் முன் வாசலில் அமர்ந்து இருப்பது வழக்கம் இவர்களுக்கு தன்னார்வலர்கள் தினமும் உணவு வழங்குவது வழக்கமாக இருக்கிறது.
வாழ்நாளையே முழுக்க தெரு ஓரம் கழித்து வரும் முதியவர்கள் வேலையற்ற இளைஞர்கள் பெண்கள் போன்றோர்கள் இப்பகுதியில் வசித்து வருகிறார்கள் இப்பகுதியில் வசித்து வரக்கூடிய ஒருவர் 70 வயது மதிக்கத் தக்க முதியவர் இவர் இன்று காலை 11 மணி அளவில் இயற்கை எய்தினார்.

இவர் 5 மணி நேரம் அங்கேயே தெரு ஓரத்திலேயே இருந்தபொழுது யாரும் இதனை கவனிக்கவில்லை 3 மணி அளவில் பாரதியார் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு நேரில் வந்து ஆட்டோ ஓட்டுனர் ஒரு முதியவர் இறந்து கிடப்பதாக தகவல் கொடுத்தார்.
இயக்குனர் திருமதி சி ஆர் தேவிகா, திருமதி நீலா, ஆகியோர் உடனே விரைந்து சென்று அந்த இறந்துபோனவர் உடலை பார்வையிட்டு பரிசோதித்து பின்னர் சேலம் B2 டவுன் காவல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
காவலர்கள் உதவியுடன் பாரதியார் மக்கள் நல்வாழ்வு சங்கத்தின் முன்னேற்பாடோடு இறந்த சடலத்தை ஒளி அமைப்பின் மூலமாக எடுத்துச் சென்று அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ மனையில் அவர் இறந்ததை உறுதி செய்த பரிசோதித்த பின்னர் டிவிஎஸ் நான்கு ரோட்டில் இருக்கக்கூடிய இடு காட்டில் புதைக்கப்பட்டது.