• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 6 பேர் கைது – 22 கிலோ கஞ்சாவுடன், வாகனங்களும் பறிமுதல்…

ByKalamegam Viswanathan

Dec 3, 2023
மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கஞ்சா கடத்தல் சம்பவம் நடைபெறுவதாக, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், திருமங்கலம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போது, திருமங்கலம் அருகே கீழ உரப்பனூர் பகுதியில் நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்களில் சோதனை செய்தபோது , அதில் 22 கிலோ கஞ்சா இருப்பதும், அவர்கள் தொடர்ந்து இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. மேலும்  22  கிலோ கஞ்சா  மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களையும்  பறிமுதல் செய்த போலீசார், தேனி மாவட்ட வருசநாடு பகுதியை சின்னன் (30), திருமங்கலம் பகுதி செங்குளத்தை சேர்ந்த மோகன்ராஜ் (21), ஊத்துமேடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (48), காந்திநகர் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (41), கப்பலூர் காலனி சேர்ந்த நல்ல காமு (43), தனக்கன்குளம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (27) ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.