• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

443 பழங்குடியினர் மக்களுக்கு சொந்த வீடு…

Byகாயத்ரி

Mar 24, 2022

தமிழகத்தில் ஏராளமான பழங்குடியின மக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கி வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணமாக வீடற்ற பழங்குடியினருக்கு இலவசமாக வீட்டுமனைப் பட்டாக்கள் தமிழ்நாடு அரசால் வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பட்டா வழங்கப்பட்ட 443 இருளர் இன பழங்குடியினர் குடும்பங்களுக்கு இலவச வீடுகள் கட்டித்தர ரூபாய் 19.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 443 வீடுகள் கட்டுவதற்கு மொத்தமாக ரூபாய் 19,37,81,490 நிதி ஒதுக்கி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.