கரூர் மாவட்டம் மாயனூர் அருகே துக்க நிகழ்வின் போது இறுதிசடங்கு ஊர்வலத்தின் போது தடை செய்யப்பட்ட பெரிய நாட்டு வெடிகள் வெடித்து 4 இளைஞர்கள் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூரை சேர்ந்த குப்புசாமி இவர் வயது மூப்பின் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.

இன்று அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்ட பின்னர் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.
அப்போது தடை செய்யப்பட்ட பெரிய நாட்டு வெடிகள் வெடிக்கப்பட்டுள்ளது.
பெரிய நாட்டு வெடிகள் வெடித்த போது அதை ஊரைச் சேர்ந்த பிரகாஷ், சக்திவேல், விக்கி, கார்த்தி ஆகிய நான்கு இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து காயம் அடைந்த நான்கு பேரும் திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
