தமிழகத்தில் தமிழுக்கு முதன்மை இடம் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் (ஆங்கில வழி பள்ளிகளிலும்) தமிழ் அனைத்து நிலை மாணவர்களுக்கும் போதிக்க வேண்டும். தமிழ் நீதிமன்ற மொழியாக வேண்டும்.
நம் முன்னோர்கள் கண்ட கனவான எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பெருங்கவிக்கோ.வா.மு சேதுராமன் தலைமையில் பன்னாட்டு தமிழுறவு மன்றம் சார்பில் 1983-ம் ஆண்டு கன்னியாகுமரியிலிருந்து_ சென்னை வரை தமிழுக்கு முதன்மை வேண்டிய, நடைபயணத்தை முன்னாள் தமிழக மேலவை உறுப்பினராக இருந்த முனைவர் சங்கரலிங்கனார் கொடி அசைத்து தொடங்கி வைத்ததை, தொடர்ந்து ஒவ்வொரு பெப்ரவரி திங்கள் 12_ம் நாளில். சென்னை நோக்கிய தமிழ் நடைபயணம். கால ஓட்டத்தில் நடைபயணத்தை தலைமை தாங்கி நடத்திய பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் முதன்மை காரணமாக கடந்த 2000_ம் ஆண்டு முதல் ஊர்தி பயணமாக மாற்றி அமைத்தனர்.

தமிழ் ஊர்தி பயணத்தின் 33_ வது ஊர்தி பயணம் இன்று காலை (பெப்ரவரி_12)ம் நாள் கன்னியாகுமரி அண்ணல் காந்தி நினைவு மண்டபம் முன் நடந்த கூட்டத்திற்கு, குமரி மாவட்ட பன்னாட்டுத் தமிழ்றவு மன்ற தலைவர் தியாகி முனைவர் கோ. முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். நிகழ்வில் தமிழ் மாமணி கோ.வா. சேதுராமன், இளங்கோ, டாக்டர்.நாகேந்திரன், தாமஸ், டாக்டர். கீதா, அமலதாஸ், முளங்குழி பா.இலாசர், புலவர் தேரூர் மு.சிவதாணு மற்றும் குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளின் சார்பில் பங்கேற்றனர்.

ஊர்தி பயணத்தை 33_வது ஆண்டில் தலைமை ஏற்று நடத்தும் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் தமிழகத்தில் ஏற்கனவே இரு மொழி கொள்கை அமலில் இருக்கும் நிலையில் ஒன்றிய அரசு மும்மொழி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் இல்லை என்றால் தமிழகத்தின் கல்வி தேவைக்கான நிதியை ஒதுக்காமல் வஞ்சனை செய்யும் பாஜகவை தமிழகத்தில் இனியும் கால் ஊன்ற செய்யக்கூடாது. தமிழக சட்டமன்றத்தில் இப்போது இருக்கும் 4_ங்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர்களே அந்த கட்சியின் கடைசி உறுப்பினர்கள் என்ற நிலையை தமிழர்கள் ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக தமிழக இளைஞர்கள் ஒரு முகமாக உழைத்து அந்த நிலையை உருவாக்க வேண்டும் என பெருங்கவிக்கோ.வாமு.சேதுராமன் அவரது பேச்சில் வெளிப்படுத்தினார்.


நிகழ்வில் பங்கேற்ற தமிழ் சான்றோர். அகவை 90 _கண்டுள்ள வாழ்நாள் சாதனையாளர், கலைமாமணி தமிழ்ப்பேராளி இயற்செல்வர் முனைவர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் இன்னும் பல நூறு அவைகளை காண வேண்டும் என வாழ்த்தி சால்வை களை அணிவித்தார்கள்.
