காரைக்கால் மாவட்டத்தில் நேற்று இரவு நகர காவல் நிலைய போலீசார் வாகன ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சொகுசு கார் ஒன்று வந்துள்ளது. இதனை போலீசார் சோதனை செய்தபோது அதில் 26 கிலோ கஞ்சா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

உடனடியாக போலீசார் அதனை பறிமுதல் செய்து அந்த காரில் பயணம் செய்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த திலீப் மற்றும் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த குமரவேல் என இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர்களது வீட்டில் இருந்து 278 கிலோ கஞ்சா என மொத்தமாக 4.5 கோடி மதிப்பிலான 304 கிலோ கஞ்சா மற்றும் ஒரு சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.