• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ரிலீசுக்கு முன்பே 300 கோடி ப்ளஸ் லாபம்? எந்த படத்திற்கு?

அஜித்தின் வலிமை படம் ரிலீசுக்கு முன்பே ரூ.300 கோடிக்கும் மேலாக வியாபாரம் பார்த்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

டைரக்டர் ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை! போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படம் பிப்ரவரி 24ம் தேதி உலகம் முழுக்க மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன! மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் அஜித் படம் என்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

உலகம் முழுக்க மிக பிரம்மாண்டமாக வெளியிடப்பட உள்ள முதல் அஜித் படம் வலிமை தான். அதே போல் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் அஜித் படமும் இது தான். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டு, மிகுந்த வரவேற்பை பெற்றது.

லேட்டஸ்ட் தகவலாக, அஜித்தின் வலிமை படம் ப்ரீ ரிலீஸ் வியாபாரம் ரூ.300 கோடியை தாண்டி விட்டதாம். வலிமையின் மொத்த பட்ஜெட்டே ரூ.150 கோடி தான். ஆனால் ரிலீசுக்கு முந்தைய வியாபாரத்திலேயே இருமடங்கு லாபத்தை எடுத்து விட்டார்கள். ரிலீசுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளது. இந்த சமயத்தில் தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இன்னும் டிக்கெட் வசூல், வெளிநாட்டு வசூல் என பல விஷயங்கள் உள்ளது. இது எத்தனை கோடிகளை தாண்டுமோ என அனைவரும் ஆச்சரியப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய சாதனையாக 90 சதவீதம் தியேட்டர்களில் வலிமை படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

தமிழக தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட பிறகு தியேட்டர்களில் ரிலீசாகும் முதல் பெரிய பட்ஜெட் படம் வலிமை தான். அதுவும் மிக அதிகமான தியேட்டர்களில் வலிமை படம் ரிலீசாக உள்ளதால் இதுவரை முடங்கி கிடந்த தியேட்டர் வியாபாரங்கள் மீண்டும் உயிர் பெறும் என்ற நம்பிக்கையுடன் தியேட்டர் உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரும் காத்திருக்கிறார்கள்.