• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஈஷா சார்பில் 3 நாள் இலவச யோகா வகுப்பு…

BySeenu

Nov 20, 2023

மூட்டு வலியில் இருந்து விடுதலை பெற உதவும், முதுகுத்தண்டு வலுப்பெறும். ஈஷா யோக மையம் சார்பில் ‘உயிர் நோக்கம்’ என்ற பெயரிலான 3 நாள் இலவச யோகா வகுப்பு டிசம்பர் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக நடைபெற உள்ளது.

இவ்வகுப்பு 3 நாட்களும் தினமும் 2 மணி நேரம் தமிழில் நடைபெறும். காலை 6 – 8, பகல் 10 -12, மாலை 6 – 8 என 3 நேரங்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். இவ்வகுப்பில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இதில் யோக நமஸ்காரம், நாடி சுத்தி போன்ற எளிமையான அதேசமயம் சக்திவாய்ந்த யோக பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்படும். இப்பயிற்சிகளை தினமும் செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் மற்றும் மன நலன் மேம்படும். குறிப்பாக
முதுகுத்தண்டு வலுப்பெறும். மூட்டு வலியில் இருந்து விடுப்பெறலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும். மன அழுத்தம் நீங்கும்.

இவ்வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 73836 73836 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால், ஒரு குறுஞ்செய்தி வரும். அதில் உள்ள லிங்கை கிளிக் செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம் அல்லது இந்த isha.co/unom இணைப்பில் பதிவு செய்து கொள்ளலாம். நவம்பர் 25-ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.