


திண்டுக்கல்லில் திருவள்ளுவருக்கு பாவேந்தர் கல்வி சோலையில் 500 கிலோ வெங்கல சிலை உருவாக்கப்பட்டது வான்புகழ் கொண்ட வள்ளுவனின் இந்த சிலையை நிறுவுவதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து சிலை அமைப்புக் குழுவின் சார்பாக தொடர்ந்து மனு கொடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இந்நிலையில் அதிமுக ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு மீண்டும் அதிகாரியுடன் கொடுத்த மனுவும் கிடப்பில் போடப்பட்டது.
பேகம்பூர் இல் உள்ள புனித லூர்து அன்னை மேல்நிலைப்பள்ளியில் வளாகத்தில் பீடம் அமைக்கப்பட்டிருந்தது சிலையும் அதே பள்ளி வளாகத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக இருந்தது இந்நிலையில் செவ்வாய் அன்று அதிகாலை திருவள்ளுவரின் சிலையை அதற்கான இடத்தில் கிரேன் மூலம் தூக்கி நிறுவப்பட்டது.

இதனால் அரசு அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள் இதனையடுத்து பள்ளி நிர்வாகத்திற்கும் சிலை அமைப்பு குழுவினருக்கும் சிலையை அகற்ற வேண்டும் என்று தொடர்ந்து அலைபேசி மூலமாக மிரட்டல் விடுத்து வந்துள்ளனர் ஆனால் சிலை அமைப்பு குழு சிலையை அகற்றுவது இல்லை என்ற முடிவு எடுத்துள்ளது சிலையை அகற்ற திமுக அரசு முயற்சி செய்தால் சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவது என்று முடிவு எடுத்துள்ளனர் இதனால் திண்டுக்கல்லில் பரபரப்பு நிலவுகிறது

