• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பீச் வாலிபால் போட்டியில், 25 மகளிர் அணிகள் பங்கேற்பு..

ByR. Vijay

Mar 15, 2025

விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த, நாகையில் துவங்கிய மகளிருக்கான மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டி; விறுவிறுப்பாக நடைபெற்ற பீச் வாலிபால் போட்டியில், 25 மகளிர் அணிகள் பங்கேற்று விளையாடினர்.

விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, நாகையில் இன்று மாவட்ட அளவிலான பெண்களுக்கான பீச் வாலிபால் போட்டிகள் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம் மற்றும் பீச் வாலிபால் கழகத்தின் சார்பில் நடைபெற்ற லீக் மற்றும் நாக்அவுட் போட்டியில், பொதுப்பிரிவினர், பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் காவல்துறை வீரர்கள் என 25, அணிகள் பங்கேற்று விளையாடினர்.

இன்று நடைபெற்ற முதல் நாள் பீச் வாலிபால் போட்டியில், அக்கரைப்பேட்டை வாலிபால் கிளப் அணியுடன்- சர் ஐசக் நியூட்டன் கல்லூரி வாலிபால் கிளப் ஆகிய அணிகள் விறுவிறுப்பாக விளையாடின. ரசிகர்களின் ஆரவாரத்துக்கு இடையே நடைபெற்ற இப்போட்டியில், அக்கரைப்பேட்டை பீச் வாலிபால் கிளப் அணி வீரர்கள் 21/13 – 21/12 என இரண்டு செட்டுகளில் புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றனர்.

இதை போல் வேளாங்கண்ணி வாலிபால் கிளப் அணியுடன், நாகை சீகேல்ஸ் வாலிபால் அணி மோதின. இதில் இரு அணிகளும் தலா ஒரு செட் வெற்றி பெற்றிருந்த நிலையில், (deciding set) இறுதி தீர்மான செட்டில் வேளாங்கண்ணி அணியை வீழ்த்தி, சீகேல்ஸ் அணி 15 க்கு 10 புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.