சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் கோவை, செட்டிபாளையம் காவல் நிலைய காவல் துறையினருக்கு கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் துறையினர், மலுமிச்சம்பட்டி அருகில் சென்று சோதனை மேற்கொண்ட போது சட்டத்திற்கு விரோதமாக 5 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்து இருந்த ஆந்திர பிரதேஷ் மாநிலத்தைச் சேர்ந்த கண்டால ராம லட்சுமணன் (20) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது, திருப்பூர் ரயில் நிலையத்தின் அருகில் உள்ள குமரன் பூங்கா முன்பாக ஒருவர் கஞ்சா வைத்து இருப்பதாக தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில் காவல் துறையினர் சம்பவம் இடம் விரைந்து சென்று சோதனை மேற்கொண்ட போது கஞ்சாவை வைத்து இருந்த ஆந்திர பிரதேஷ் மாநிலத்தைச் சேர்ந்த மந்த வீரபாபு (21) என்பவரை காவல் துறையினர் கைது செய்து காவல் நிலையம் அளித்து வந்தனர்.

இந்நிலையில் இருவரிடமும் சட்டத்திற்கு விரோதமாக விற்பனைக்கு வைத்து இருந்த சுமார் 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.