கோவையில் தேசிய அளவிலான 23 வது வூசு ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி அரசூர் பகுதியில் உள்ள கே.பி.ஆர். கல்லூரி வளாகத்தில் துவங்கியது. ஐந்து நாட்கள் நடைபெற உள்ள இதன் துவக்க விழா,கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு வூசு சங்கத்தின் பொது செயலாளர் ஜான்சன் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில், இந்திய வூசு சங்கத்தின் தலைமை செயல் அதிகாரி சுஹைல் அஹமது,கல்லூரி முதல்வர் சரவணன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்..
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கே.பி.ஆர்.கல்வி குழுமங்களின் தலைவர் கே.பி.ராமசாமி,கோவை மாநகர காவல்துறை தெற்கு துணை ஆணையர் சரவணக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஐந்து நாட்கள் நடைபெற உள்ள போட்டிகளில் பஞ்சாப்,ஹரியானா, உத்தரபிரதேசம்,
மணிப்பூர் ,மகாராஷ்டிரா,கேரளா,தமிழ் நாடு என நாடு முழுவதும் இருந்து சுமார் 1300 வீரர் வீராங்கனைகள் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
முன்னதாக துவக்க விழாவை முன்னிட்டு 31 மாநிலங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகளின் அணி வகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து தற்காப்பு கலையான வூசு கலையை மாணவ,மாணவிகள் வாள்,சுருள் வாள்,மற்றும் கம்புகளை சுற்றி அசத்தலாக செய்து காண்பித்தனர்.

இதனை கூடியிருந்த பார்வையாளர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். போட்டிகள் முறையே, சான்சூ மற்றும் டவ்லு ஆகிய இரண்டு பிரிவுகளில் நடைபெற்றன. துவக்க விழாவில்,தமிழ்நாடு வூசு சங்கத்தின் தொழில் நுட்ப இயக்குனர் ரவி,கோவை மாவட்ட தலைவர் கணேசன்,கே.பி.ஆர்.கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர்கள் செந்தில்,முத்துலட்சமி,ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.