• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

5 கே கார் கேர் நிறுவனத்தின் 207 வது கிளை

BySeenu

Oct 9, 2024

5 கே கார் கேர் நிறுவனத்தின் 207 வது கிளை கோவை சரவணம்பட்டி அருகில் உள்ள கீரணத்தம் பகுதியில் துவங்கப்பட்டது.

கோவையை தலைமையிடமாக கொண்டு கார்கள் சர்வீஸ் மற்றும் அது தொடர்பான அனைத்து சேவைகளையும் வழங்கி வரும் 5 கே கார் கேர் நிறுவனம் தென்னிந்திய அளவில்,200 க்கும் மேற்பட்டகிளைகளுடன் வாடிக்கையாளர்களின்பெரும் வரவேற்பை பெற்று இயங்கி வருகிறது. நடுத்தர வகை கார்கள் முதல் உயர் ரக சொகுசு கார்கள் வரை அனைத்து வகையான கார்களை பராமரிப்பதில் முன்னனி நிறுவனமான 5 கே கார் கேர் 35 இலட்சம் வாடிக்கையாளர்களை கொண்டு 2500 க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் தனது 207 வது கிளையை சரவணம்பட்டி அருகில் உள்ள கீரணத்தம் பகுதியில் 5 கே கார் கேர் மையத்தின் புதிய கிளை துவங்கப்பட்டது. கிளையின் உரிமையாளர் ஜாவித் தலைமையில் நடைபெற்ற இதன் துவக்க விழாவில்,5 கே கார் கேர் நிறுவனத்தின் நிறுவனர் கார்த்திக் குமார் சின்ராஜ் கலந்து கொண்டு புதிய கிளையை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக எஸ்.கே.கே.இண்டஸ்ட்ரீஸ் உரமையாளர் குமார்,சேரன் அகாடமி நிறுவனர் ஹுசைன் அஹமத், பிரீமியம் வாடிக்கையாளர் ராஜேஷ் மற்றும் 5 கே கார் கேர் நிறுவனத்தின் ஊழியர் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். புதிய கிளையின் சேவைகள் குறித்து கிளை உரமையாளர் ஜாவித் மற்றும் 5 கே கார் கேர் நிறுவனத்தின் நிறுவனர் தலைமை செயல் அதிகாரி கார்த்திக் குமார் சின்னராஜ் ஆகியோர் பேசினர்.

கார்கள் பராமரிப்பில் கார் டீடெயிலிங் எனும் பணியை எங்களது நிறுவனம் சிறப்பாக செய்து வருவதாகவும், ஒவ்வொரு கிளை திறப்பின் போதும் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் விதமாக புதிய புதிய சலுகைகளை அறிவித்து வருவதாக கூறிய அவர், கீரணத்தம் பகுதியில் துவங்கியுள்ள புதிய கிளை துவக்க விழாவை முன்னிட்டு ஏராளமான புதிய சலுகைகள் வழங்க உள்ளதாகவும், ஆண்டு பராமரிப்பு ஏ.எம்.சி.யில் புதிய சலுகைகள் வழங்கப்பட உள்ளதாகவும் கிளை உரிமையாளர் தெரிவித்தார். விழாவில் 5 கே கார் கேர் நிறுவன அனைத்து நிலை ஊழியர்கள்,பல்வேறு கிளை உரிமையாளர்கள், வாடிக்கையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.