• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நடிகர் சூர்யாவுக்கு தனிப்பட்ட முறையில் வெளியே செல்ல 2 போலீஸ்…

Byமதி

Nov 18, 2021

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெய் பீம்’. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. படத்தை சூர்யா தயாரித்துள்ளார்.

இந்நிலையில், ‘ஜெய் பீம்’ திரைப்படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. பாமக சார்பில் அந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நடிகர் சூர்யாவுக்கு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதனால், நடிகர் சூர்யாவின் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போட கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதன்பேரில் தியாகராயநகர் ஆற்காடு சாலையில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டுக்கு நேற்று முன் தினம் இரவில் இருந்து துப்பாக்கி ஏந்திய 5 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.சூர்யாவுக்கு தனிப்பட்ட முறையில் துப்பாக்கியுடன் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். சூர்யா வெளியில் செல்லும்போது அந்த போலீசாரும் கூடவே சென்று வருகிறார்கள்.