• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கொடைக்கானல் மலைச்சாலையில் தலைக்குப்புற கார் கவிழ்ந்து 2 பேர் காயம்…

Byதரணி

Nov 21, 2023

கோவையை சேர்ந்தவர் சுதர்சன் (23) இவர் தனது நண்பருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். பின்னர் அங்குள்ள இடங்களை சுற்றி பார்த்து விட்டு கோவைக்கு காரில் திரும்பி கொண்டிருந்தார். காரை சுதர்சன் ஓட்டினார். அவரது நணபர் உள்ளே அமர்த்து இருந்தார். பண்ணைக்காடு அருகே வத்தலக்குண்டு – கொடைக்கானல் மலைப்பாதையில் ஊத்து என்ற இடத்தில் கார் வந்தபோது அங்குள்ள வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதிய கார் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் சுதர்சன், அவரது நண்பர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். விபத்து காரணமாக மலைப்பாதையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.